Then Thirupathi, Thiruvannamalai, Srinivasa Perumal Temple, Srivilliputhur, Tamilnadu

 

தென் திருப்பதி என்றழைக்கப்படும் இத்திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீநிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் தோற்றம் திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் தோற்றமேயாகும். இங்கு இறைவனை சேவிப்பது திருப்பதி சென்று இறைவனை தரிசிப்பதற்கு சமமாகும். இக்குன்றின் இறக்கத்தில், கிழக்குப்பகுதியில் கோபால்சாமி கோயில் உள்ளது. மலையடிவாரத்தில் மேற்குப்பகுதியில் வனப்பேச்சியம்மன் கோயில் உள்ளது. மேலும் இக்குன்றின் அடிவாரத்தில் ‘கோனேரி’ என்றழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளக்கரையில் 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட விநாயகர் சிலை உள்ளது.

இக்குன்றின் மீது ஏறுவதற்கு மிக அகலமான படிக்கட்டுகள் உள்ளன. தற்போது இப்படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பக்தர்கள் நிழலில் செல்வதற்காக மேற்க்கூரை இடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாதாந்திர சனிக்கிழமையும் விசேடமானதாகும். புரட்டாசித்திங்களில் 5 சனிக்கிழமைகளிலும் கருட சேவைத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிறப்புப்பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் இத்தலம் வரை இயக்கப்படுகின்றன. விருதுநகர், மதுரை, தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

தினமும் காலை முதல் இரவு வரை  ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திருந்து அரசுப்பேருந்து மற்றும் சிறுபேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.