Srivilliputhur town introduction in Tamil

கோயில் நகர் எனச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமை வாய்ந்த இவ்வூரில் புராதனச்சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. புகழ் பெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவடபத்திர சயனர் திருக்கோயில் ஆகிய இரு பெருங்கோயில்கள் இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இராஜகோபுரமே தமிழக அரசின் சின்னமாக உள்ளது.

 இவ்வூரின் மேற்கே அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அடர்ந்த காடுகளின் இருப்பிடமாகவும், வனவிலங்குகளின் உறைவிடமகவும் உள்ளது.

 திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.208) இந்நகரின் வழியாகச் செல்கிறது. நகரிலிருந்து  11 கிலோ மீட்டர் தொலைவில் இராசபாளையம் மற்றும் 20 கிலோ மீட்டர் தொலைவில் சிவகாசி நகரும் அமைந்துள்ளன.

 

அருகில் உள்ள முக்கிய நகரங்கள்:

 

மதுரை- 75 கி.மீ

சென்னை-515 கி.மீ

விருதுநகர்- 40 கி.மீ