பெரியகுளம் கண்மாய்

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் தேவை மற்றும் விவசாயம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக  இக்கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரானது, மம்சாபுரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாயை நிரப்பி, அதன் உபரி நீர், சில சிறிய கண்மாய்களை நிரப்பி கடைசியில் இக்  கண்மாய்க்கு வருகிறது. இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய கண்மாயாகும்.