- SINGAPORE RADIO (OLI 96.8)
- MALAYSIA MINNAL FM
- Sri Lanka Broadcasting Corporation (ThENDRAL FM)
- Tamil service of Radio Veritas
- ALL INDIA RADIO
- Details
- Written by Administrator
- Category: Uncategorised
- Hits: 592
ஸ்ரீவில்லிபுத்தூர் வரலாறு (History of Srivilliputhur)
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியிருந்த பகுதிகள் மல்லி என்ற அரசியின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வரசிக்கு வில்லி மற்றும் கண்டண் என இரு புதல்வர்கள் இருந்தனர். இருவரும் வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்த போது கண்டணை புலி கொன்று விட, அதை அறியாத வில்லி அவனைத் தேடி அலைந்து, களைத்து உறங்கிய சமயத்தில், இறைவன் கனவில் வந்து நடந்ததைக் கூறினார். மனம் தெளிந்த வில்லி இறைவனின் ஆணைப்படி அங்கு கோயில் எழுப்பி, காட்டைத் திருத்தி அழகிய நகரை உண்டாக்கினான். இதனாலே இவ்வூர் வில்லிபுத்தூர் எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஆண்டாள் அவதரித்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் எனச் சிறப்பு பெற்றது.
திருமலை நாயக்கர்(1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள்(1689-1706) ஆட்சி காலத்தில் இவ்வூர் சிறப்புடன் விளங்கியது. திருமலை நாயக்கர் இவ்வூர்க்கோயில்களில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். இவ்வூர் 1751 முதல் 1756 வரை நெற்கட்டுச்சேவல் ஜமீன்தார் பூலித்தேவர் ஆளுகையிலும், பின்பு முகம்மது யூசுப்கான் கீழும் இருந்தது. பிறகு 1850 வரை ஸ்ரீஆண்டாள் கோயில் திருவாங்கூர் மன்னரின் பொறுப்பில் இருந்தது. பின்பு நாடு சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இவ்வூர் 1838ல் திருநெல்வேலி மாவட்டத்திலும், 1910ல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தது. பிறகு மேற்கு இராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு இராமநாதபுரம் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது முதல், ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
- Details
- Written by Administrator
- Category: Uncategorised
- Hits: 1076
காட்டழகர் கோவில்
(செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்)
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு காட்டுப்பகுதியில் உள்ள மலைக்குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு திருமால் காட்டழகர் என்னும் பெயரில் காட்சி அளிக்கிறார்.
காலையிலும், மாலையிலும் அரசுப்பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அடர்ந்த காடுகளிடையே சுமார் 5 கி.மீ நடந்து சென்றால் கோவில் மலை அடிவாரத்தை அடையலாம்.
கோவில் அடிவாரத்தில் ‘நூபுர கங்கை’ எனப்படும் தீர்த்தம் உள்ளது. இது துர்வாச முனிவரால் சாபம் பெற்ற சுபதா முனிவர் சாப விமோசனம் பெற்ற இடமாகும்.
மலை மீது ஏறிச்செல்ல 246 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சுந்தரராசப்பெருமாள் என்ற்ழைக்கப்படும் காட்டழகர், ஸ்ரீதேவி (சுந்தரவல்லி) மற்றும் பூமிதேவியருடன் (சௌந்தரவல்லி) நின்ற கோலத்தில் அருள் தருகிறார். அர்த்த மண்டபத்தில் துவார பாலகர், சுபதா முனிவர் (மண்டூக மகரிஷி), சக்கரத்தாழ்வார், சேனை முதல்வர், ஆதிவராகர், ஞானப்பிரான் ஆகியோரின் சிலைகள் உள்ளன.
மகாமண்டபத்திற்கு வெளியே கருடாழ்வார் சந்நிதி இறைவனைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருடாழ்வாரின் தென்புறம் காவல் தெய்வங்களான பதினெட்டாம்படிக் கருபசாமி, எமன், காலன், தூதன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இம்மண்டபத்தின் தூண்கள் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் வருடப் பிறப்பு நாள் மற்றும் ஒவ்வொறு சனிகிழமையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் பெருமளவு பக்தர்கள் அழகரை தரிசிக்கின்றனர்.
- Details
- Written by Administrator
- Category: Uncategorised
- Hits: 721
SRIVILLIPUTHUR MAP